உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை துவக்கத்தில் யுடர்ன் அமைக்க கோரிக்கை

வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை துவக்கத்தில் யுடர்ன் அமைக்க கோரிக்கை

வண்டலுார்:வண்டலுாரில் இருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையில், வழி தவறி செல்லும் வாகன ஓட்டிகள் உடனடியாக திரும்பும்படி, முதல் 300 மீ., தூரத்திற்குள், 'யுடர்ன்' திருப்பம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை வரும் வாகன ஓட்டிகள், வட சென்னை பகுதியான பட்டாபிராம், திருநின்றவூர், ஆவடி, அம்பத்துார், பூந்தமல்லி மற்றும் பொன்னேரி, மீஞ்சூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு விரைவாக செல்ல, வண்டலுார் முதல் மீஞ்சூர் வரை, 62 கி.மீ., நீளமுள்ள வெளிவட்ட சாலை உள்ளது.வண்டலுார் உயிரியில் பூங்கா எதிரே தொடங்கும் இந்த வெளிவட்ட சாலையின் துவக்கப்பகுதி குழப்பத்தை தருவதால், புதிதாக சென்னை வரும் வாகன ஓட்டிகளில், தாம்பரம், கிண்டி, சைதாபேட்டை, அண்ணாசாலை, நோக்கி செல்ல வேண்டிய பலர், தவறாக இந்த வழித்தடத்தில் நுழைந்து பயணிக்கின்றனர்.இவ்வாறு கவனக் குறைவாக, வெளிவட்டச் சாலையில் நுழைந்து பயணிக்கும் வாகன ஓட்டிகள், சுதாரித்து, மீண்டும் தாம்பரம் நோக்கி செல்ல, எச்சரிக்கை பலகை மற்றும் 'யு டர்ன்' திருப்பம் இல்லை.இவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, உடனே தாம்பரம் நோக்கி செல்ல, வெளிவட்டச் சாலையின் முதல் 300 மீ., தூரத்திற்குள் 'யுடர்ன்' திருப்பம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி