உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூணங்கரணை மயான பாதையில் சிமென்ட் சாலை அமைக்க கோரிக்கை

கூணங்கரணை மயான பாதையில் சிமென்ட் சாலை அமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு அன்னங்கால் ஊராட்சி உள்ளது.அன்னங்கால் ஊராட்சிக்கு உட்பட்டு கூணங்கரணை கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், அன்னங்கால் - கூணங்கரனை சாலையில், மயானத்திற்கு செல்லும் மண்பாதை உள்ளது.மழைக்காலங்களில், இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.அதனால், மண்பாதையை தரம் உயர்த்தி, சிமென்ட் சாலையாக அமைக்க, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !