உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொத்தேரி ஏரிக்கரை சாலையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை

பொத்தேரி ஏரிக்கரை சாலையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை

மறைமலைநகர்:பொத்தேரி ஏரிக்கரை சாலையை, தார்ச்சாலையாக மாற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மறைமலைநகர் நகராட்சி பொத்தேரி ஏரிக்கரை சாலை, 1 கி.மீ., துாரம் நீளம் உடையது. இந்த சாலையை வல்லாஞ்சேரி, கிழக்கு பொத்தேரி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ,- மாணவியர் மறைமலைநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை மண் சாலையாக உள்ளதால், வாகனங்கள் அதிக அளவில் செல்லும் போது புழுதி பறந்து, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, இந்த சாலையை சீரமைத்து, தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை