உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் பழுது இடித்து புதிதாக கட்டித்தர கோரிக்கை

வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் பழுது இடித்து புதிதாக கட்டித்தர கோரிக்கை

மதுராந்தகம்:அருங்குணம் ஊராட்சியில் பழுதடைந்து உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றி, புதிதாக கட்டித் தர வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.செல்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அருங்குணம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு அருங்குணம், புளியரணங்கோட்டை, சோழந்தாங்கல் ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டு வருகிறது.புளியரணங்கோட்டை செல்லும் சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன், இந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.தற்போது இந்த கட்டடம் பழுதடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.அதனால், கிராம நிர்வாகம் சார்ந்த ஆவணங்களை பாதுகாப்பதில் சிரமமாக உள்ளது.எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அமைத்து தர வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை