மேலும் செய்திகள்
பூட்டி கிடக்கும் கழிப்பறையை திறக்க கோரிக்கை
13-Oct-2025
மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவிலில், பாழடைந்துள்ள கழிப்பறையை இடித்து அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவிலில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, அனுமந்தபுரம் சாலையில் அங்கன்வாடி மையம் அருகே, 20 ஆண்டு களுக்கு முன் இலவச பொது கழிப்பறை கட்டப்பட்டது. முறையாக பராமரிக்காததால், நாளடைவில் கட்டடம் சிதிலமடைந்து, சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும், கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கழிப்பறை அருகே அங்கன்வாடி மையம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை உள்ளன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், அபாய நிலையிலுள்ள இந்த கழிப்பறையை இடித்து அகற்ற வேண்டுமென, அப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
13-Oct-2025