உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுதாமூர் பயணியர் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த வேண்டுகோள்

சிறுதாமூர் பயணியர் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த வேண்டுகோள்

அச்சிறுபாக்கம்:சிறுதாமூர் -அனந்தமங்கலம் கூட்டு சாலையில் உள்ள பழுதடைந்த நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரத்தி- - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து சிறுதாமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது. அந்த கூட்டுச்சாலைப் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் பயன்பெற்று வந்தனர். தற்போது, நிழற்குடை உரிய பராமரிப்பின்றி, விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. நிழற்குடையை சீரமைக்க வேண்டி, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளுக்கு, புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன், பழுதடைந்துள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். அதே பகுதியில், புதிதாக பயணியர் நிழற்குடை கட்டித்தர , ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை