பயன்பாடில்லாத கிணறு இடித்து அகற்ற கோரிக்கை
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பேட்டை ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பள்ளிப்பேட்டை ஊராட்சியில் இருந்து, 'ஈபி' காலனி வழியாக மேல்மருவத்துார் செல்லும் சாலையோரம், குடிநீர் கிணறு உள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.தற்போது, மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து, குழாய்கள் வாயிலாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.அதனால், கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடின்றி, இந்த கிணற்றில் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன.கிணற்றில் தண்ணீர் உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.எனவே, பயன்பாடு இல்லாத இந்த கிணற்றை ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, இடித்து சமன்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.