உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழுதான சமுதாயக்கூடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்ட வேண்டுகோள்

பழுதான சமுதாயக்கூடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்ட வேண்டுகோள்

திருப்போரூர்,:கரும்பாக்கம் ஊராட்சியில், சேதமடைந்துள்ள சமுதாயக்கூடத்தை இடித்து அகற்றி, புதிதாக கட்ட வேண்டுமென, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்போரூர் ஒன்றியம், கரும்பாக்கம் ஊராட்சியில் கரும்பாக்கம், ராயல்பட்டு, விரால்பாக்கம், பூயிலுப்பை, பாலுார் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இதில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு, 15 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் சார்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தது. இதில், அப்பகுதி மக்கள் திருமணம், வளைகாப்பு போன்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். இந்நிலையில், சமுதாயக்கூடத்தை முறையாக பராமரிக்காததால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, கடந்த ஓராண்டாக பயன்பாடு இல்லாமல், பூட்டி வைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த சமுதாயக்கூடத்தில் தனி சமையல் அறை, தனி உணவுக்கூடம் இல்லை.எனவே, பழுதடைந்து, பயன்பாட்டில் இல்லாத இந்த சமுதாயக்கூடத்தை இடித்து அகற்றி, அதே இடத்தில் உணவுக்கூடம், சமையல் அறை, மணமக்கள் அறை, வரவேற்பு அறை என, கூடுதல் வசதியுடன் புதிதாக கட்ட வேண்டுமென, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை