உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவான்மியூர்- - முள்ளிப்பாக்கம் பஸ் சின்னவிப்பேடுக்கு நீட்டிக்க கோரிக்கை

திருவான்மியூர்- - முள்ளிப்பாக்கம் பஸ் சின்னவிப்பேடுக்கு நீட்டிக்க கோரிக்கை

திருப்போரூர்:திருவான்மியூர்- - முள்ளிப்பாக்கம் இடையே இயக்கப்படும் பேருந்தை, சின்னவிப்பேடு வரை நீட்டிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய முள்ளிப்பாக்கம் கிராமத்திற்கு, திருவான்மியூரிலிருந்து தடம் எண் 523 என்ற மாநகர பேருந்து இயக்கப்படுகிறது.இப்பேருந்து சோழிங்கநல்லுார், கேளம்பாக்கம், திருப்போரூர், கொட்டமேடு வழியாக முள்ளிப்பாக்கம் வருகிறது.போக்குவரத்து இல்லாத சின்னவிப்பேடு சுற்றியுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள கல்வி நிறுவனம், தொழில் நிறுவனங்களுக்கு செல்வதில் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.முள்ளிப்பாக்கத்திற்கும் சின்னவிப்பேடு கிராமத்திற்கு, 3 கி.மீ., துாரம் தான் இடைவெளி உள்ளது. எனவே, தடம் எண் 523 பேருந்தை, சின்னவிப்பேடு வரை நீட்டித்தால், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு போக்குவரத்து எளிதாகும். இது மிகப் பெரிய உதவியாகவும் அமையும். எனவே, இதற்கு அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டுமென பொதுமக்கள், மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ