உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் அபாய வளைவு சிக்னல் அமைக்க கோரிக்கை

சாலையில் அபாய வளைவு சிக்னல் அமைக்க கோரிக்கை

திருக்கழுக்குன்றம்:வழுவதுாரில் உள்ள அபாய வளைவு பகுதிகளில் எச்சரிக்கை சிக்னல் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றம்- கருங்குழி சாலையில், அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதுார் அருகே, அபாய வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதிகளில் சாலையையொட்டி, குளம், விவசாய நிலங்கள் உள்ளன. இந்த அபாய வளைவில் எச்சரிக்கை சிக்னல் இல்லாததால், இரவில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் , வளைவு பகுதி இருப்பதை அறியாமல் தடுமாறி, அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றன. எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வழுவதுார் அபாய வளைவு பகுதியில், ஆய்வு செய்து, எச்சரிக்கை சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !