உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கீழாமூர் காட்டு பகுதி சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

கீழாமூர் காட்டு பகுதி சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

மதுராந்தகம்:மேல்மருவத்துாரில் இருந்து வந்தவாசி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, கீழாமூருக்கு செல்லும் காட்டுப்பகுதி சாலையில், மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கத்திலிருந்து எல்.எண்டத்துார், உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.ராமாபுரம் அடுத்த கீழாமூர், செம்பூண்டி, எல்.எண்டத்துார் என, பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இப்பகுதிக்கு செல்லும் சாலையில், இரண்டு கி.மீ., துாரம், காப்புக்காட்டை கடந்து செல்ல வேண்டி உள்ளது.அந்த காப்புக்காட்டில் மான், காட்டுப்பன்றி, உடும்பு, நரி, முயல் உள்ளிட்ட விலங்குகளும், மயில் உள்ளிட்ட பறவைகளும் உள்ளன.காப்புக்காட்டில், கடந்த 6 மாதங்களுக்கு முன், தார்ச்சாலை சீரமைக்கப்பட்டது.ஆனால், சாலை ஓரம் மின்விளக்கு வெளிச்சமின்றி உள்ளது.இரவு நேரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால், சாலையை திடீரென விலங்குகள் கடந்து செல்கின்றன.அதனால், இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, சாலையோரம் மின்விளக்கு வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி