உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடப்பாக்கம்- திண்டிவனம் அரசு பேருந்து இயக்க கோரிக்கை

கடப்பாக்கம்- திண்டிவனம் அரசு பேருந்து இயக்க கோரிக்கை

கடப்பாக்கம்:செய்யூர் அடுத்த கடப்பாக்கம் ,வெண்ணாங்குப்பட்டு, தேட்டச்சேரி வில்லிப்பாக்கம், சூணாம்பேடு போன்ற கிராமங்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பிற்காக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சென்று வருகின்றனர்.மேலும் கடப்பாக்கம் பகுதியில் கடலில் பிடிக்கபடும் கடல்சார் உணவுப்பொருட்களை விற்பனை செய்ய, திண்டிவனம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.திண்டிவனம் பகுதியில் தினசரி காய்கறி மற்றும் மலர் சந்தை செயல்படுவதால், கடப்பாக்கம், சூணாம்பேடு பகுதியில் உள்ள பூ வியாபாரிகள் தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் திண்டிவனம் செல்கின்றனர்.கடப்பாக்கம்- திண்டிவனம் இடையே தற்போது, ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது.மக்கள் பயன்பாடு அதிகம் உள்ள தடத்தில் ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால்,காலை, மாலை வேலைகள் மற்றும் விழாக்காலங்களில் குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவியர் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிப்படுகின்றனர்.ஆகையால் துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வுசெய்து, சூணாம்பேடு வழியாக கடப்பாக்கம்-திண்டிவனம் இடையே அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ