மேலும் செய்திகள்
பள்ளத்தில் பயணியர் கூடம்
12-Jul-2025
கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, அணுகு சாலையில் பேருந்துகளை நிறுத்த வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளே செல்கின்றன. ஆனால், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் மாநகர பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளே செல்வதில்லை. மாறாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் பயணியரை இறக்கிவிட்டுச் செல்கின்றன. இங்கு அணுகுசாலை உள்ள நிலையில், பயணியரை பாதுகாப்பாக இறக்கி விடலாம். ஆனால், போக்குவரத்து அதிகமுள்ள ஜி.எஸ்.டி., சாலையில் பயணியரை இறக்கி விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன், பயணியர் ஜி.எஸ்.டி., சாலையை திடீரென கடக்கும் போது, வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி உயிர் பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது குறித்து பயணியர் கூறியதாவது: செங்கல்பட்டு, மறைமலை நகர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் இருந்து தாம்பரம் செல்லும் மாநகர பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் பயணியரை இறக்கி விடுகின்றன. இந்த இடத்தில் அணுகு சாலை இருந்தும், அதை பயன்படுத்தாமல், ஜி.எஸ்.டி., சாலையிலேயே பயணியர் இறக்கி விடப்படுவதால், இந்த வழித்தடத்தில் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது. தவிர, இந்த இடத்தில் முறையான 'சிக்னல்' இல்லை. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்லும் பயணியர் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவ, குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே போலீசார் உள்ளனர். எனவே, அணுகு சாலையில் பேருந்தை நிறுத்தவும், பயணியர் பத்திரமாக சாலையைக் கடக்க, 24 மணி நேரமும் போக்குவரத்து போலீசார் பணி செய்யவும், பேருந்து நிழற்குடை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
12-Jul-2025