ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க கோரிக்கை
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், வாக்காளர் கணக்கீட்டு விண்ணப்பம் வழங்கும் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு, முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என, அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத் தில் சோழிங்கநல்லுார், தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் தனி, செய்யூர் தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த ஏழு தொகுதிகளில், 2 7 லட்சத்து 87 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில், செங்கல்பட்டு மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக் டர் சினேகா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிக ள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கலெக்டர் சினேகா பேசியதாவது: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, வாக்காளர் விபரங்களை சரிபார்ப்பர். வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும், தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படும். இந்த கணக்கெடுப்பு படிவத்தில், தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள தேவையான விபரங்களைக் கொண்டிருக்கும்.
நடவடிக்கை
ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது, மூன்று முறை சென்று அலுவலர்கள் சரிபார்ப்பர். இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியோரை கண்டறிவர். டிச., 4ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிச., 9ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு, அவர் பேசினார். இதுகுறித்து, அரசியல் கட்சியினர் கூறியதாவது: ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, விண்ணப்பங்களை வழங்க வேண்டும். கிராமப்புறங்களில், சரியான தகவல் பெற முடியும். நகர்ப்புறங்களில், வாடகை வீடுகளில் இருப்பவர்கள், அடிக்கடி வேறு இடத்திற்குச் செல்லும் சூழல் உள்ளது. இதனால், ஒவ்வொரு தெருக்களிலும், அனைத்து வீடுகளுக்கும் விண்ணப்பங்கள் கொடுத்து, அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து அனுப்ப வேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள் என, ஒரு தொகுதிக்கும் 30,000 பேர் வரை உள்ளனர். இவர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.