உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமான வையாவூர் சாலை சீரமைக்க வேண்டுகோள்

சேதமான வையாவூர் சாலை சீரமைக்க வேண்டுகோள்

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டது, வையாவூர் ஊராட்சி.படாளத்திலிருந்து வையாவூர் வழியாக வேடந்தாங்கல் செல்லும், மாநில நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலையில் இருந்து பிரிந்து, பெரிய காலனி பகுதிக்கு மண் சாலை அமைக்கப்பட்டது.தற்போது, சாலை கடுமையாக சேதமாகி குண்டும் குழியுமாக, ஜல்லி கற்கள் பெயர்ந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இருசக்கர வாகனங்களில் செல்வோர், அடிக்கடி கீழே விழுந்து அடிபடுகின்றனர்.சாலை மிகவும் மோசமாக உள்ளதால், ஆட்டோ ஓட்டுநர்கள் கூட இப்பகுதிக்கு சவாரி வருவதில்லை என, பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், பெரிய காலனி பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ