உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுவர் பூங்காவை சீரமைக்க நெற்குணப்பட்டில் கோரிக்கை

சிறுவர் பூங்காவை சீரமைக்க நெற்குணப்பட்டில் கோரிக்கை

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த நெற்குணப்பட்டு ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே, 10 ஆண்டுகளுக்கு முன் சி6றுவர் பூங்கா அமைக்கப்பட்டது.அப்பகுதி குழந்தைகள் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்றவற்றை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல், சிறுவர் பூங்காவில் பொருட்கள் சேதமடைந்து, மழைநீர் தேங்கி, யாரும் பயன்படுத்த முடியாத நிலையில், தற்போது உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நெற்குணப்பட்டு சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை