உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலுார் குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டுகோள்

பாலுார் குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டுகோள்

மறைமலை நகர்:பாலுார் குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில் விவசாயம் பிரதான தொழில். பாலுார் கிராமத்தில், பாலுார் -- ஒரகடம் நெடுஞ்சாலையை ஒட்டி, கிராமத்தின் பொது குளம் உள்ளது. இந்த குளம், கிராமத்தின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில மாதங்களாக, குளத்தின் தண்ணீரில் பாசி படர்ந்து, பச்சை நிறமாக மாறி உள்ளது. இதனால், இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, தண்ணீரில் உள்ள பாசியை அகற்றி, குளத்தை துார் வார வேண்டும். அத்துடன், சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டுமென, பாலுார் கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை