உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமான மழைநீர் வடிகால் சீரமைக்க கோரிக்கை

சேதமான மழைநீர் வடிகால் சீரமைக்க கோரிக்கை

வண்டலுார்:வண்டலுார், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள வடிகால்கள், மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால், மழைநீர் வடிந்தோட வழியின்றி, சாலையில் தேங்கி, போக்குவரத்தில் தடை ஏற்படும் நிலை உள்ளது. பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான, 29 கி.மீ., ஜி.எஸ்.டி., சாலையை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை பராமரித்து வருகிறது. இந்த சாலையில், பல இடங்களில், மழைநீர் வடிந்தோட முறையான வடிகால் இல்லை. தவிர, 15 ஆண்டிற்கு முன் அமைக்கப்பட்ட வடிகால் அனைத்தும், தூர்ந்து, பெயர்ந்து, மழைநீர் செல்ல வழியின்றி உள்ளது. தற்போது மழைகாலம் துவங்கி உள்ள நிலையில், வடிகால்களை முறையாக தூர்வாரி, மழை நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை எழுப்பி உள்ளனர். வாகன ஓட்டிகள் கூறியதாவது: வடிகால்கள் முறையாக இல்லாததால், சிறு மழை பெய்தாலும், ஜி.எஸ்.டி., சாலையில், நீர் தேங்கி, போக்குவரத்தில் தடை ஏற்படுகிறது. தற்போது மழைகாலம் நெருங்குவதால், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வடிகால்களை துார்வாரி, அடைப்புகளை நீக்கி, மழைநீர் வழிந்தோட செய்யும்படி, கட்டமைக்க வேண்டும். இல்லையெனில், பெரு மழை பெய்யும்போது, ஜி.எஸ்.டி., சாலையில், நீர் வெளியேற வழியின்றி, சாலையிலேயே தேங்கும். இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்தும் பாதிக்கப்படும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, துார்ந்து கிடக்கும் வடிகால்களை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை