உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதல்வர் விழாவிற்காக உடைக்கப்பட்ட ஐ.டி.ஐ., சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை

முதல்வர் விழாவிற்காக உடைக்கப்பட்ட ஐ.டி.ஐ., சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த, மலையடி வேண்பாக்கம் பகுதியில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளன. இந்த வளாகம் அருகில், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு திட்ட தொடக்க விழாற்கு, கடந்த மார்ச் 11ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தார். இந்த விழாவிற்கு, பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் நிறுத்த, ஐ.டி.ஐ., வளாகத்திற்கு நிறுத்தவதற்காக, சுற்றுவரை உடைத்தனர்.இந்த வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தப்பட்டது. ஆனால், விழா முடிந்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், ஐ.டி.ஐ., வளாக சுற்றுசுவர் உடைக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கப்படாமல் உள்ளது. சமூக விரோத கும்பல், ஐ.டி.ஐ., வளாகத்தில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஐ.டி.ஐ., வளாக சுற்று சுவர் உடைக்கப்பட்டதை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை