உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சட்டமங்கலம் ஏரிகளை துார்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டுகோள்

சட்டமங்கலம் ஏரிகளை துார்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டுகோள்

மறைமலை நகர் சட்டமங்கலத்தில் உள்ள ஏரிகளை துார்வாரி, மதகுகளை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சி, சட்டமங்கலம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில், சுண்ணாம்பு குளம் மற்றும் பெரிய ஏரி என, இரண்டு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் நீரை பயன்படுத்தி, 20 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஏரிகளில் உள்ள அனைத்து மதகுகளும் பழுதடைந்து, மழைக்காலங்களில் கூட தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாய நீர் பாசனம் இல்லாத ஏரிகள் கூட, கடந்த சில மாதங்களாக துார் வாரப்பட்டு, மதகுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. விவசாய பாசனத்திற்கு பயன்படும் இந்த ஏரிகளின் மதகுகள், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, இந்த பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் வகையில், இந்த இரண்டு ஏரிகளையும் துார்வாரி, மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை