அச்சிறுபாக்கத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் அச்சிறுபாக்கம் பகுதி பேருந்து நிறுத்தம் உள்ளது. சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலை ஓரம் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதை தவிர்க்கும் விதமாக, 2023ல் நிழற்குடை அகற்றப்பட்டு, 100 அடி துாரம் தள்ளி, மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அப் பகுதியில் பேருந்துகள் நின் று செல்ல ஓட்டுநர்களுக் கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அங்கு நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் முதியோர் மற்றும் பெண்கள் உட்கார இடமின்றி வெயிலில் நி ன்று, பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், அங்கு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.