உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மாம்பாக்கம் சந்திப்பு சாலையை அகலப்படுத்த வேண்டுகோள்

 மாம்பாக்கம் சந்திப்பு சாலையை அகலப்படுத்த வேண்டுகோள்

திருப்போரூர்: மாம்பாக்கம் சந்திப்பில், சாலையை அகலப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில், நான்கு முனை சந்திப்பு சாலை உள்ளது. இந்த சந்திப்பில் சாலையை ஒட்டி, அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ - - மாணவியர் படித்து வருகின்றனர். இந்த சாலை சந்திப்பின் கிழக்கில், ஓ.எம்.ஆர்., -- இ.சி.ஆர்., செல்லும் சாலை உள்ளது. மேற்கில் ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் செல்லும் சாலைகள் உள்ளன. வடக்கில் மேடவாக்கம் செல்லும் சாலையும், தெற்கில் காயார் செல்லும் சாலையும் உள்ளன. மேலும், இந்த மாம்பாக்கம் சாலை சந்திப்பு வழியாக, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகின்றன. இதில், மேடவாக்கம் மற்றும் காயார் சாலைகளில் திரும்பிச் செல்லும் பகுதி, குறுகியதாக உள்ளது.இதனால், வாகனங்கள் திரும்பும்போது, எதிரே வரும் வாகனங்களுக்கு வழியில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, கனரக வாகனங்கள் திரும்பிச் செல்லும்போது, போதிய வழியில்லாமல் விபத்தில் சிக்குகின்றன. அந்த நேரத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் தேங்கி, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல், பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழை நேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாம்பாக்கம் சந்திப்பில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ