உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நீர்த்தேக்க குடிநீர் தொட்டி படுமோசம் விபத்து அபாயத்தில் கிராம வாசிகள்

நீர்த்தேக்க குடிநீர் தொட்டி படுமோசம் விபத்து அபாயத்தில் கிராம வாசிகள்

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே உள்ள வேட்டைக்காரகுப்பம் ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டுரங்கபுரம் விநாயகர் கோவில் அருகே மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது.அதேபோல், வேட்டைக்காரகுப்பம் காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த இரு நீர்த்தேக்க தொட்டிகளும் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துாண்கள் பலவீனமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது.ஊராட்சி கனிமவள நிதியில் இருந்து, வேட்டைக்காரகுப்பம் காலனி மற்றும் பாண்டுரங்கபுரம் பகுதிக்கு, தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அகற்றப்படாமல் உள்ளது.இதன் காரணமாக, பருவமழை காலத்தில் பலத்த காற்று வீசினால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடியிருப்பு பகுதியில் விழும் அபாய நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குடியிருப்பு வாசிகளின் நலன் கருதி, விபத்து ஏற்படும் நிலையில் உள்ள இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை