மேலும் செய்திகள்
அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
05-May-2025
திருப்போரூர்:வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனஞ்செழியன், 50; ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் குடும்பத்தைப் பிரிந்து, கடந்த ஆறு ஆண்டுகளாக, திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில், வாடகையில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, இவர் தங்கியிருந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து, பக்கத்து வீட்டில் வசிப்போர் தாழம்பூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, வீட்டுக் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. பின், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கழிப்பறையில் தனஞ்செழியன் இறந்து, அழுகிய நிலையில் உடல் கிடந்துள்ளது.போலீசார் தனஞ்செழியன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, உடல்நலம் பாதிப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரிக்கின்றனர்.
05-May-2025