உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம்

சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம்

சித்தாமூர் அடுத்த ஈசூரில் இருந்து புத்திரன்கோட்டை செல்லும் சாலையில், மதுரா புதுார் கிராமத்திற்கு செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இப்பகுதியில் செயல்படும் 'கிரஷர்'களில் இருந்து ஏராளமான லாரிகள் தினமும் செல்வதால், சாலை சந்திப்பு பகுதியில் சாலை நடுவே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பி.சிதம்பரம், சித்தாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை