சாலையோர ஆக்கிரமிப்புகள் சித்தாமூரில் விபத்து அபாயம்
சித்தாமூர்;சித்தாமூரில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மற்றும் செய்யூர் - போளூர் செல்லும் இரண்டு மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் முக்கிய சாலை சந்திப்பு உள்ளது.செய்யூர் - போளூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், இப்பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் கடந்து செல்கின்றன.செய்யூரில் இருந்து வெண்ணாங்குப்பட்டு செல்லும் சாலையின் வளைவுப் பகுதியில், சாலையை ஆக்கிரமித்து பூக்கடை, பழக்கடை உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், சாலை வளைவில் செல்லும் கனரக வாகனங்கள், சாலையோர கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.