உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மாமல்லை நுழைவாயிலில் சாலையோர பூங்கா அமைப்பு

 மாமல்லை நுழைவாயிலில் சாலையோர பூங்கா அமைப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நுழைவாயிலில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம், பிரபல சுற்றுலா பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவர் கால கற்சிற்பங்களை ரசிக்க, அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வருவோர், இங்கிருந்து சென்னை செல்வோர், நகராட்சியின் முதல் வார்டு பகுதியான, தேவனேரியைக் கடந்தே செல்கின்றனர். இப்பகுதியில் கடக்கும் கிழக்கு கடற்கரை சாலையில், உட்புற சாலை வடக்கிலும், தெற்கிலும் இணையும் சந்திப்புகள் உள்ளன. நகராட்சிப் பகுதியின் வடக்குப்புற நுழைவாயிலாக உள்ள இச்சந்திப்புகளை அழகுபடுத்த, நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது. இதையடுத்து தற்போது, சாலையோரத்தில் பூங்கா அமைத்து, பூச்செடிகள் நடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி