உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளியை வட்டமடிக்கும் ரோமியோக்கள் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை

பள்ளியை வட்டமடிக்கும் ரோமியோக்கள் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை

சிங்கபெருமாள் கோவில்:பள்ளி வளாகங்கள் அருகே முகாமிட்டு, மாணவியரை சீண்டும் 'ரோமியோ'க்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் காவல் நிலைய எல்லையில் மறைமலை நகர், கம்பர் தெருவிலும், சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த இரண்டு பள்ளிகளிலும், சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 1,200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிகளுக்கு தினமும் அரசு பேருந்து, ஷேர் ஆட்டோ, சைக்கிள் உள்ளிட்டவற்றில் வந்து செல்கின்றனர். ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து 1 கி.மீ., தினமும், அதிகமான மாணவியர் நடந்து சென்று வருகின்றனர். அப்போது, 'ரோமி யோ'க்கள் பலர் இருசக்கர வாகனங்களில், அதிக ஒலி எழுப்பியபடி சுற்றி வருகின்றனர். பள்ளி விடுவதற்கு முன்பாகவே நுழைவாயிலில் காத்திருக்கும் அவர்கள், மாணவி யரை கிண்டல் செய் தல், சைகை காட்டுவது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: மாணவியரை பின் தொடர்ந்து செல்லும், 'ரோமியோ'க்கள், அவர்களிடம் சமூக வலைதள முகவரி கேட்பது, மொபைல் போன் எண்ணை கேட்பது என, தொல்லை கொடுத்து வருகின்றனர். மாணவியர் பாதுகாப்பிற்காக, பெற்றோர் உடன் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய போலீசார், கண்டும் காணாமல் உள்ளனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், பள்ளி வளாகங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் தினமும் ரோந்து செல்ல வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !