உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காய்கறிகள் விற்பனை செங்கை சந்தையில் மந்தம்

காய்கறிகள் விற்பனை செங்கை சந்தையில் மந்தம்

மறைமலை நகர்:செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி மார்க்கெட், மகேந்திரா சிட்டி அருகில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர், திருக்கழுகுன்றம் பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில கிராமங்களில் இருந்தும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், மொத்த விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன. கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து காரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இந்த காய்கறிகளை புறநகர் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில்லறை விற்பனை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, செங்கை புறநகரில் வசித்து வரும் தென் மாவட்டங்களை சேர்ந்தோர் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கினர். இதனால் காய்கறிகள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. வியாபாரிகள் கூறியதாவது: தொடர் விடுமுறையால், கேண்டீன், ஹோட்டல் உள்ளிட்டவையும் மூடப்படுகின்றன. இதனால், இரண்டு நாட்களாக விற்பனை மற்றும் காய்கறிகள் விலை குறைந்து உள்ளது.கடந்த வாரம், ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள், இந்த வாரம் 10 ரூபாய் வரை குறைந்து உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி மார்க்கெட் விலை விவரம்:ஒருகிலோ -ரூபாய்புடலை 15பாவக்காய் 20கத்தரி 50கோவை 45சுரை 30பீர்க்கங்காய் 35வெண்டை 50மஞ்சள் பூசணி 10காராமணி 10கீரை 20வெங்காயம் 55தக்காளி 30வாழைக்காய் 5


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ