மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாட்டம்
19-Mar-2025
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடப்பாக்கம் தொடக்கப் பள்ளியில், ஆண்டு விழா நடந்தது.பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கூடப்பாக்கத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 21 மாணவ, மாணவியருடன் செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் நேற்று முன்தினம், ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஆசிரியர் பயிற்றுநர் ராஜபாரதி ஆகியோர் தலைமை வகித்தனர்.தற்காலிக ஆசிரியை உஷா ஆண்டறிக்கை வாசித்தார்.பேச்சு போட்டி, கவிதை, நடனம், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.இதில், பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
19-Mar-2025