உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் சீமான் பேரணி வி.சி.,யினர் குவிந்ததால் சலசலப்பு

திருப்போரூரில் சீமான் பேரணி வி.சி.,யினர் குவிந்ததால் சலசலப்பு

திருப்போரூர்:திருப்போரூர் பகுதியில் பஞ்சமி நிலம் மீட்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என்ற தலைப்பில் நேற்று, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.இதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடாரஹீம், புரட்சித் தமிழர் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதலில் பேரணி ஓ.எம்.ஆர்., சாலை தண்டலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து, திருப்போரூர் ரவுண்டானா அருகே வரை வந்து பொதுக்கூட்டம் நடந்தது.இதற்கிடையில், ஏர்போர்ட் மூர்த்தி கூட்டத்தில் பங்கேற்க வருவதை அறிந்து, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வி.சி.,யினர் முடிவு செய்தனர்.இதனால், திருப்போரூர் பகுதி வி.சி.,யைச் சேர்ந்த சமரன், செல்வகுமார், விடுதலைநெஞ்சன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர், ரவுண்டானா அருகே குவிந்தனர். இதையறிந்த திருப்போரூர் போலீசார், அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். அதன் பின், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத் அவர்களை சமரசம் செய்ததும் அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி