உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டை அனுப்பி வைப்பு

 அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டை அனுப்பி வைப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தில், நவீன நெல் சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள், லாரிகள் மூலமாக செங்கல்பட்டு கொண்டு சென்று, ரயில்களில் ஏற்றி, தென் மாவட்ட அரவை 'மில்'களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் குருவை பருவத்திற்கு, தமிழ்நாடு வாணிப கழகத்தின் மூலமாக, நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டன. அவ்வாறு, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், சிலாவட்டத்தில் உள்ள, 15,000 டன் கொள்ளளவு கொண்ட, கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி, பாதுகாக்கப்பட்டு வந்தன. தற்போது, இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலமாக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டு, தென் மாவட்டங்களில் உள்ள அரவை 'மில்'களுக்கு, ரயில்களில் அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ