உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லத்துார் பி.டி.ஓ., ஆபீசில் கழிவுநீர் அகற்றம்

லத்துார் பி.டி.ஓ., ஆபீசில் கழிவுநீர் அகற்றம்

பவுஞ்சூர், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, லத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தில், சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர் அகற்றப்பட்டது.பவுஞ்சூர் பஜார் பகுதியில், லத்துார் பி.டி.ஓ., அலுவலகம் செயல்படுகிறது.இந்த அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நல அலுவலகம், வட்டார கல்வி வள மையம், வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் உள்ளிட்ட, பல அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.பி.டி.ஓ., அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.அனைவரும் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொது கழிப்பறையை பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், நீண்ட நாட்களாக கழிவுநீர் தொட்டியில் இருந்த கழிவுநீர் அகற்றப்படாமல் இருந்தது. கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிந்து, அந்த வளாக சாலையில் பெருக்கெடுத்ததால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேற்று, கழிவுநீர் அகற்றும் லாரி வாயிலாக, கழிவுநீரை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ