முருகன் கோவில்களில் சஷ்டி விழா
நந்திவரம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடர்பாக, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.கூடுவாஞ்சேரி, ரயில் நிலையம் அருகில் உள்ள, மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் வள்ளி தெய்வானை சமேத, சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், கந்த சஷ்டி விழாவை ஒட்டி, சுப்பிரமணிய சுவாமிக்கு, பல விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 10.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. வரும் வியாழக்கிழமை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து சூரசம்ஹாரம் மற்றும் முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.