உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்தீஸ்வரர் கோவில் நுழைவாயிலில் கடைகள், வாகனங்களால் இடையூறு

நந்தீஸ்வரர் கோவில் நுழைவாயிலில் கடைகள், வாகனங்களால் இடையூறு

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரத்தில் நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் கோவிலுக்கு சொந்தமாக, கோவிலைச் சுற்றி பல ஏக்கர் நிலம் உள்ளது.இந்நிலையில், இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, கிருத்திகை, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, இடையூறு ஏற்படும் விதமாக, கோவில் முகப்பு வாசலில் இடதுபுறம் மற்றும் வலதுபுறங்களில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மேலும் இங்கு, நடைபாதை கடைகளும் அதிகரித்து உள்ளன.இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:பழமை வாய்ந்த நந்தீஸ்வரர் கோவிலுக்கு, சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல், வெளியூர்களிலிருந்தும் விசேஷ நாட்களில் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாதபடி, கோவில் முன் உள்ள நுழைவாயில் பகுதியில், அதிகமான வாகனங்கள் மற்றும் கடைகள் உள்ளன.இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் நடைபாதை கடைகளால் கோவிலுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், இங்கு அத்துமீறி வைக்கப்பட்டுள்ள கடைகள், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டண பார்க்கிங் வசதி செய்வதற்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு மாதமும் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் பக்தர்கள், குழந்தைகள் மற்றும் பெரியோர்களுடன் வரும் போது மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை