உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கம்போடியாவில் ஆசிய கிக்பாக்ஸிங் தமிழக வீரர்கள் ஆறு பேர் பங்கேற்பு

கம்போடியாவில் ஆசிய கிக்பாக்ஸிங் தமிழக வீரர்கள் ஆறு பேர் பங்கேற்பு

சென்னை, ஆசிய கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் நடப்பாண்டு போட்டிகள், கம்போடியா நாட்டின் ப்னோம் பென் நகரில் இன்று துவங்கி வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.இதில், வயது மற்றும் எடை பிரிவின் கீழ், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், சையத், சாதிக், சாய் சுனிதா, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நீனா மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஆகியோர், இந்திய அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.பயிற்சியாளர் சுரேஷ் பாபு கூறியதாவது:இப்போட்டியில், இந்திய அணிக்காக களமிறங்கும் தமிழக வீரர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. உலகின் முன்னணி வீரர்களை வீழ்த்தி தமிழக வீரர்கள் பதக்கங்களுடன் நாடு திரும்புவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை