உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தடுப்புகள் இல்லாத சிறுபாலம் கீழக்கரணையில் விபத்து அபாயம்

தடுப்புகள் இல்லாத சிறுபாலம் கீழக்கரணையில் விபத்து அபாயம்

மறைமலைநகர், மறைமலைநகர் நகராட்சி 17வது வார்டு, காமராஜர் சாலை -- கீழக்கரணையில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த சாலை வழியாக, மறைமலைநகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, அதிக வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும் சுற்றியுள்ள சித்தமனுார், பெரிய செங்குன்றம் உள்ளிட்ட கிராம மக்களும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில், அம்மன் கோவில் அருகே வளைவில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறு கால்வாய் உள்ளது.இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின் இருபுறமும், எந்தவித தடுப்புகளும் இல்லை.அதனால், சாலை சந்திப்பு வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.அதேபோல், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிடும் போதும், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன.எனவே, இந்த சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை