காவலரை தாக்கிய ராணுவ வீரர் கைது
பல்லாவரம்:பல்லாவரம் அடுத்த நாகல்கேணி, சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்தவர் சிவசக்தி, 36. ராணுவ வீரர். ஒரு மாதம் விடுப்பில், சிவசக்தி வீட்டிற்கு வந்தார்.மது போதையில், சிவசக்தி தன் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சங்கர் நகர் காவல் நிலையத்தில் இருந்து, காவலர் மணிமுருகன், 31, விசாரிக்க சென்றார். அப்போது, ராணுவ வீரர் சிவசக்தி, போலீசார் மணிமருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, சிவசக்தியை போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.