சூரசம்ஹார விழா செய்தி ஆட்
பெரும்பேர் கண்டிகையில் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலமாக உள்ளது. கடந்த 21 ல், கந்த சஷ்டி விழா மஹா அபிஷேகம், வேல் பூஜை, சத்ரு சம்ஹார அர்ச்சனை, சக்தி வேலாயுத அர்ச்சனையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, நேற்று, காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகம், நண்பகல் 12:00 மணிக்கு வேல் பூஜை, மாலை 5:00 மணிக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை, சக்தி வேலாயுத அர்ச்சனையுடன் மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது. மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடைபெற்றது. பெரும்பேர் கண்டிகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.