உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாளை சிறப்பு கிராம சபை கூட்டம் துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு

நாளை சிறப்பு கிராம சபை கூட்டம் துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு

மாமல்லபுரம்:தமிழகத்தில், நவ., 1ம் தேதி உள்ளாட்சி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில், ஊராட்சிப் பகுதிகளில், கிராமசபை கூட்டம் நடத்தப்படும்.இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகைக்கு மறுநாளாக இந்நாள் அமைந்தது. இதனால் கூட்டம் நடத்தும் சிரமம் கருதி, ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர், கூட்டத்தை ஒத்திவைக்குமாறு, அரசிடம் வலியுறுத்தினர். அரசும் பரிசீலித்து, கூட்டத்தை ஒத்திவைத்தது.இந்நிலையில், ஊரக வளர்ச்சி இயக்குனரக உத்தரவின்படி, நாளை இக்கூட்டம் நடத்தப்படுகிறது. ஊராட்சியில், சுழற்சி முறையை பின்பற்றி, கிராமசபை கூட்ட நிகழ்விடம் தேர்வு செய்து நடத்தவும், சிறப்பாக பணியாற்றும் துாய்மைக் காவலர்கள், சிறந்து செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோரை பாராட்டி கவுரவிக்குமாறும், ஊரக வளர்ச்சி இயக்குனர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.மேலும், வடகிழக்கு பருவமழைக் கால முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்காமல் தவிர்ப்பது, புயல் பாதுகாப்பு மையங்களை துாய்மைப்படுத்தி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றின் கரைகளை கண்காணிப்பது, மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்டவற்றுக்கும், அரசு திட்டங்கள் குறித்தும், தீர்மானம் இயற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை