உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேடந்தாங்கல் சரணாலயத்தில் அதிநவீன டெலஸ்கோப் அமைப்பு

வேடந்தாங்கல் சரணாலயத்தில் அதிநவீன டெலஸ்கோப் அமைப்பு

மதுராந்தகம்:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை சுற்றுலா பயணியர் ரசிக்க, அதிநவீன 'டெலஸ்கோப்' அமைக்கப்பட்டு உள்ளது.மதுராந்தகம் அருகே உலக புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலவிதமான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.கூழைக்கடா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், வக்கா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் உள்ளன.தற்போது, 20,000க்கும் அதிகமான பறவைகள், சரணாலயத்தில் தங்கி உள்ளன.தற்போது, சுற்றுலாப் பயணியர் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கல்வி சுற்றுலா வருகின்றனர்.பறவைகளை அருகில் காணும் வகையில், சரணாலயத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில், கடந்த ஆண்டு டெலஸ்கோப் அமைக்கப்பட்டது.அது பழுதாகி, இந்தாண்டு துவக்கம் முதல், சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர்.எனவே, கண்காணிப்பு கோபுரத்தில், நவீன டெலஸ்கோப் பொருத்த வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, வனத்துறை ஏற்பாட்டில், புதிதாக அதிநவீன டெலஸ்கோப், இரண்டு கண்காணிப்பு கோபுரத்தில் பொருத்தப்பட்டு உள்ளது.இந்த புதிய அதிநவீன டெலஸ்கோப்பின் லென்ஸ், 82 மி.மீ., புறநிலை விட்டம் கொண்டதுடன், 2.1 டிகிரி முதல் 1 டிகிரி வரை பார்வை கோணம் -உள்ளது.இதில், 52 அடி முதல் 110 அடி துாரத்தில் உள்ள பறவைகளை துல்லியமாக காணலாம். தற்போது, புதிய டெலஸ்கோப் வழியாக பறவைகளை காணும் சுற்றுலா பயணியர் சிறிய பறவைகள், கூடுகள், இறகு, பறவைகளின் கண் போன்றவற்றை அருகில் பார்ப்பது போல உணர்வதாக கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை