உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் சேகரித்த மாணவர்கள்

கோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் சேகரித்த மாணவர்கள்

திருப்போரூர்:மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊராட்சி நிர்வாகம், இந்துஸ்தான் நிகர்நிலை பல்கலை சார்பில், திருப்போரூர் அடுத்த கோவளம் ஊராட்சி கடற்கரையில் நேற்று காலை பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்றும் பணி நடந்தது. இதில், கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அவர்களுடன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் செங்கல்பட்டு மாவட்ட பயிற்சி சப் - கலெக்டர் ஹலென் மாலதி, இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எத்திராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார், ஊராட்சி தலைவர் சோபனா தங்கம், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் இணைந்து துாய்மை பணியில் ஈடுபட்டனர்.இதில், 500 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டது. மட்கும் குப்பை, மட்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.குப்பையை அகற்றிய பின், 'கடற்கரைகளில் இனி குப்பை போட மாட்டோம்' என, உறுதிமொழி ஏற்றனர்.தொடர்ந்து, கடல் வளத்தை பாதுகாக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கடற்கரைகளை சுத்தம் செய்யப்படுகிறது.ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால், கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. அவற்றை பாதுகாக்க கடற்கரை மற்றும் கடலை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ