மானியத்தில் ஆட்டோவுக்கு பதிவு
திருப்போரூர்:தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் முகாம், கேளம்பாக்கத்தில் நேற்று நடந்தது.தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பெண் ஓட்டுநர்களுக்கு, புதிதாக ஆட்டோ ரிக் ஷா வாகனம் வாங்க, 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இதற்காக, நல வாரியத்தில் பதிவு செய்யும் முகாம், திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது.கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்று, முகாமை துவக்கினர்.