உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று தைப்பூச ஜோதி விழா

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று தைப்பூச ஜோதி விழா

மேல்மருவத்துார்ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி விழா, இன்று நடைபெறுகிறது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில், தைப்பூச ஜோதி விழாவையொட்டி, சக்தி மாலை இருமுடி விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, தைப்பூச ஜோதி சக்தி மாலை இருமுடி விழாவையொட்டி, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 15ம் தேதி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இன்று நடக்கவுள்ள தைப்பூச ஜோதி விழாவையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகத்துடன், கலசவிளக்கு வேள்வி பூஜை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி, நேற்று துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று அதிகாலை 3:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அன்னாதானத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில் குமார் துவக்கி வைக்கிறார். தைப்பூச ஜோதி ஊர்வலத்தை, ஆன்மிக இயக்க துணை தலைவர் அன்பழகன் துவக்கி வைக்கிறார்.ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், தைப்பூச ஜோதி மேடையில், தைப்பூச ஜோதி விழா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் நடக்கிறது.ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தின் இயக்குனர் ராஜராஜன், வருமானவரித்துறை துணை ஆணையர் நந்தகுமார், கலெக்டர் அருண்ராஜ், ஒய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் ஆகியோர், தைப்பூச ஜோதியை ஏற்றி வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ