உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டாஸ்மாக் கடை சுவரை உடைத்து சரக்கு ஆட்டை

டாஸ்மாக் கடை சுவரை உடைத்து சரக்கு ஆட்டை

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கீழவலம் பகுதியில், மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலை அருகே, அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் வழக்கம் போல, ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்து உள்ளே சென்று, விலை உயர்ந்த மதுபானங்களை திருடிச் சென்றுள்ளனர்.திருடு போன மதுபானங்களின் மதிப்பு, 25,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து நேற்று, மதுபான கடை ஊழியர்கள், மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை