உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செங்கை கலெக்டர் உத்தரவு

டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செங்கை கலெக்டர் உத்தரவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில், படூர் டாஸ்மாக் கடை எண்: 4196 மற்றும் வண்டலுார் தாலுகாவில் கண்டிகை டாஸ்மாக் கடை எண்: 4197 ஆகிய கடைகள் இயங்கி வருகின்றன.இந்த கடைகளால், சாலையில் நடந்து செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவியர், வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் ஆகியோர் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.அப்பகுதியில் மது அருந்திவிட்டு திரியும் போதை ஆசாமிகள், போதை தலைக்கு ஏறியதும், சாலையில் நடந்து செல்லும் பெண்களை கிண்டல் செய்து, வம்புக்கு இழுத்து தகராறு செய்வது தொடர்கிறது.அதனால், இந்த டாஸ்மாக் கடையை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என, கலெக்டரிடம் கடந்த டிசம்பர் மாதம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர். அதன் அடிப்படையில், மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் ராகுல்நாத், டாஸ்மாக் கடையை வேறிடத்திற்கு உடனடியாக மாற்ற வேண்டும் என, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ