மேலும் செய்திகள்
பைக் திருடும் கும்பல் செங்கல்பட்டில் கைது
14-Dec-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 23ம் தேதி 'யமஹா ஆர்.15' பைக் விபத்தில் சிக்கி, அதில் வந்த வாலிபர் காயமடைந்து உள்ளதாக, அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த வாலிபரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், பைக்கில் வந்த வாலிபர் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்,27, என தெரிந்தது. மேலும், இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை ஆய்வு செய்த போது, குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிஷோர்குமார், 27, என்பவர் பெயரில் இருந்தது.கடந்த 20ம் தேதி, இந்த பைக் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து திருடப்பட்டதும், கிஷோர்குமார், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததும் தெரிந்தது.இதையடுத்து, சதீஷ்குமாருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், நேற்று அவரை செங்கல்பட்டு நகர போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
14-Dec-2024