உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சோதனை நடத்திய போது, ரேஷன் கடை அருகில், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்கிற மதன், 23, திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சையத் முகமது அப்துல், ரஹ்மான் என்கிற முஸ்தாக், 23, ஆகியோர் கஞ்சா விற்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, 1.3 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை