மேலும் செய்திகள்
மறைமலைநகரில் வழிப்பறி இருவருக்கு போலீஸ் 'காப்பு'
14-Aug-2025
மறைமலை:சிங்கபெருமாள் கோவில் அருகே, பெண்ணிடம் தாலி செயின் பறிக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம், நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம், 55. இவரது மனைவி குமுதா, 50. மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க, சென்னை துரைப்பாக்கத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு, தம்பதி நேற்று முன்தினம்,'டி.வி.எஸ்., ஸ்கூட்டி'யில் சென்றனர். அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பினர். ஜி.எஸ்.டி., சாலையில், சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் அருகில் வந்த போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், குமுதா கழுத்தில் அணிந்திருந்த, 3.5 சவரன் தங்க தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து தம்பதி, மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, செயின் பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
14-Aug-2025