உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலை சந்திப்பில் கண்காணிப்பு கேமரா

தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலை சந்திப்பில் கண்காணிப்பு கேமரா

திருப்போரூர்,:திருப்போரூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் அடங்கிய 8 வார்டுகளில் தண்டலம், பூந்தண்டலம், மேட்டுத்தண்டலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.ஓ.எம்.ஆர்., சாலை தண்டலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து, பிரதான நான்கு முனை சந்திப்பு சாலை உள்ளது.சாலையின் கிழக்கில் தண்டலம், பூந்தண்டலம் சாலை; மேற்கில் மேட்டுத்தண்டலம் சாலை; வடக்கில் மாமல்லபுரம் சாலை; தெற்குபுறத்தில் திருப்போரூர் செல்லும் சாலைகள் உள்ளன. இங்கு சாலை சந்திப்பில், கடந்த ஓராண்டுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ஆனால், ஓ.எம்.ஆர்., சாலையில் சென்ற கனரக லாரி மோதி, கேமரா கம்பம் மற்றும் அங்கிருந்த உயர்கோபுர மின் விளக்கு கம்பம் உடைந்து சாய்ந்தன.இதனால், சில மாதங்களாக கண்காணிப்பு கேமரா பயன்பாடின்றி இருந்து. இந்நிலையில், குற்றச் செயல்களை தடுக்க, மீண்டும் கண்காணிப்பு கேமரா பொருத்த ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி, தண்டலம் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ள சாலை சந்திப்பில், 5 அடி உயரத்தில் பாதுகாப்பு கான்கிரீட் சுவர் அமைத்து, அதில் உயர்கோபுர கம்பம் பொருத்தி மின்விளக்கு, எச்சரிப்பு சிக்னல் மற்றும் பகுதிகளை கண்காணிக்கும் விதமாக, நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ